Tuesday, March 30, 2010
அரசியல் என்பது மாபெரும் புத்தகம், அதில் நான் எப்பொழுதும் பாடம் கற்கும் மாணவன்தான், வேண்டுமென்றால் தினகரனுக்கு அதை கற்றுக் கொடுக்கவும் நான் தயார்
Wednesday, March 24, 2010
- மலேசிய சரித்திரத்தில் முதன்முறையாக தமிழ்ப்பள்ளிகளுக்கு வருடாந்திர நிதிநிலை அறிக்கையில் (Budget) ஒதுக்கீடு வழங்கியது பினாங்கு மாநில அரசுதான் என்பது சுப்பையாவிற்கு மட்டும் தெரியாமல் போனது எப்படி? கடந்த ௨௦௦௯ ஆம் ஆண்டு ௧.௫ மில்லியன் ரிங்கிட்டை பினாங்கிலுள்ள ௨௮ தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கியது. அதே போல அந்த ஒதுக்கீடு ௨0௧0 ஆம் ஆண்டு, ௧.௭௫ மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியெல்லாம் பத்திரிகைகளில் வருகின்றது, இதையெல்லாம் டத்தோ சுப்பையா படிப்பதே கிடையாதா?
- மலேசியாவில் முதன்முறையாக சாலை பெயர்பலகைகளில் தமிழுக்கும் இடம் தந்ததும் பினாங்கு மாநில அரசுதான். பினாங்கு நகரில் சுற்றி பார்த்தாலே அது தெரியும். daththo சுப்பையா பினாங்கு நகருக்குள் சென்று ரொம்ப நாட்கள் ஆகின்றதோ?
- பினாங்கு மாநிலத்தில் உள்ள தமிழ், தமிழர் சார்ந்த, உண்மையிலேயே மக்களுக்கு சேவை செய்யும் அரசு சாரா இயக்கங்களுக்கு ஒதுக்கீடு வழங்கி வருவதும் பினாங்கு மாநில அரசுதான். நம்மை அணுகும் பல்வேறு இயக்கங்களும் இது போன்ற ஒதுக்கீடுகள் கடந்த காலங்களில் எட்டாக்கனியே என்பதை கூறுவது டத்தோ சுப்பையாவிற்கோ எதோ தெரியாதுதான்.
- பினாங்கு மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழகத்தின் அங்காடி கடைகள் மற்றும் உரிமங்கள் ௩௦௦க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்துள்ளன. டத்தோ சுப்பையா ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்த காலத்தில் இந்த எண்ணிக்கை ௩௩௦க்கும் குறைவாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதே செபராங் பிறை நகராண்மைக் கழகத்தில் உறுப்பினராக இருந்த டத்தோ சுப்பையா அவர் காலத்தில் எத்தனை இந்தியர்களுக்கு அங்காடி கடைகள், உரிமங்கள் வழங்கப்பட்டது என்பதை குறிப்பிடுவாரா?
- பினாங்கில் உள்ள ஆலயங்கள் கடந்த காலங்களில் எப்படியெல்லாம் நடத்தப்பட்டன என்பது டத்தோ சுப்பையாவிற்கு தெரியாதா? கடந்த ஆட்சியில் இவரின் சொந்த தொகுதியான பாகான் டாலாம் சிவன் ஆலயம் சொந்த நிலத்திலிருந்து விரட்டப்பட்டதே, அப்பொழுது இந்த சுப்பையா என்ன செய்தார்? இன்று அந்த ஆலயத்திற்கான நிலத்தை வழங்கும் அடிப்படை வேளைகளில் பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசுதான் முன்னெடுத்தது. இதே போல், எத்தனை ஆலயங்களை கழிவு நீர் குட்டைகளுக்கு அருகில் இடம்பெயர வைத்திருப்பார்கள்? அப்பொழுதெல்லாம் டத்தோ சுப்பையா என்ன செய்துக் கொண்டிருந்தார்? இன்று இந்து ஆலயங்களை அவ்வாறு நடத்துவதற்கு எவனுக்காவது தைரியம் உண்டா? இல்லை; ஏன் தெரியுமா? பினாங்கு மக்கள் கூட்டணி அரசில், இந்தியர்களின் பிரதிநிதிகளாக உள்ளவர்கள் உங்களை போன்ற தலையாட்டி பொம்மைகள் அல்ல.
- இன்று வரையிலும், பினாங்கில் உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலம் வழங்கும் திட்டங்களையும் முனைப்புடன் செயல்பட்டு வருவது மக்கள் கூட்டணி அரசுதான். தனியாரிடம் உள்ள நிலத்தை கையகப்படுத்தி தமிழ் பள்ளிகளுக்கு வழங்கவும் மாநில அரசு தயாராக உள்ளது. இது போல தேசிய முன்னணி அரசு எத்தனை தமிழ் பள்ளிகளுக்கு நிலம் ஒதுக்கியது? டத்தோ சுப்பையா அறிக்கை தருவாரா?
- பினாங்கு மாநில அரசாங்க துறைகளிலும், மாநில அரசாங்கத்தின் நிறுவனங்களிலும் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு எவ்வாறு பெருகியுள்ளது என்பதை நீங்களே நேராக சென்று காணலாம். எத்தனை இந்தியர்கள் பினாங்கு மாநில அரசாங்கத்தின் நிறுவனங்களில் உயர் பதவிகளில் உள்ளனர் என்பதை டத்தோ சுப்பையா கொஞ்சம் கணக்கெடுத்து விட்டு பிறகு பேசினால் நன்றாக இருக்கும்.
- பினாங்கு மாநிலத்தில் வாக்களிக்கும் ௬0 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு, இன வேறுபாடு பார்க்காமல் ஒவ்வொரு வருடமும் ௧00 ரிங்கிட் வழங்குகின்றது பினாங்கு மாநில அரசுஇதில் பல இந்தியர்களின் பெயரும் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. டத்தோ சுப்பையா இந்த திட்டத்திற்கு தனது பெயரையும் பதிந்து கொண்டு பிறகு, நாங்கள் செய்கின்றோமா இல்லையா என்பதை கூறலாம்.
இப்படி மக்கள் கூட்டணி பினாங்கு மாநில அரசு நடவடிக்கைகளின் சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இதற்கெல்லாம் முதலில் டத்தோ சுப்பையா பதில் கூறட்டும், பிறகு எங்களின் சாதனைகளை நாங்கள் பட்டியலிடுகிறோம். பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசு இந்தியர்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று பச்சையாக பொய் பேசியிருக்கும் டத்தோ சுப்பையாவிற்கு நாங்கள் ஒன்று கூற விரும்புகிறோம். நாங்கள் மக்கள் சேவையே மகேசன் சேவை என்று எங்களின் வழியில் போய் கொண்டிருக்கின்றோம். மக்களுக்கு மட்டுமே சேவை செய்து வரும் நாங்கள், நித்தியானந்தா போன்ற சாமியார்களை அழைத்து வந்து மக்களுக்கு பிரசங்கம் செய்யவில்லை; அவ்வாறு பினாங்கு மாநிலத்தில் பெரிய, பெரிய பிரசங்கமெல்லாம் நடத்தியது யாரென்பதை மக்கள் அறிவர்.
பினாங்கு பொதுமக்களிடத்தில் தனது பேச்சு எடுபடாது என்பதால்தான், தனது கட்சிக்காரர்களிடம் டத்தோ சுப்பையா ஏதேதோ உளறி வருகிறார். அவர்களும், அதை ஆர்வமில்லாமல் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். முடிந்தால் டத்தோ சுப்பையா தனது வழக்கறிஞ்சர் தொழில் முனைப்பு காட்ட வேண்டும்; இல்லையென்றால் தனது ஒய்வு காலத்தை முறையாக கழிக்க வேண்டும், அதை விடுத்து ஊர் ஊராக சென்று நித்தியனாந்தாவை போல பொய் பிரசாரமும், பிரசங்கமும் செய்துக் கொண்டிருக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
Monday, March 22, 2010
Friday, February 5, 2010
கோயம்பூத்துரிலிருந்து நமது நிருபர் த.மேத்தியுஸ்.
பிப்ரவரி 6 2010
தமிழகம் கோவையில் இன்று தொடங்கும், உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துக்கொள்ள, மலேசியாவிலிருந்து பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி தலைமையில் 30 பேர் பேராளர் குழுவினர் இங்கு வந்து சேர்ந்தனர். நேற்று நண்பகல், கோயம்பூத்தூர் விமான நிலையம் வந்தடைந்த பேராசிரியர் அவர்தம் குழுவினரையும், ஏற்பாட்டுக்குழு தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் ஆதரவாளர்கள், மலேசியப் பேராளர்களுக்கு வீர வரவேற்பு வழங்கினர்.
மாநாட்டின் முதல்நாளான இன்று (6-2-2010) பேராசிரியர் இராமசாமி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து பேருரை ஆற்றுவார். உலக முழுவதிலும் இருந்து இம்மாநாட்டில் கலந்துக்கொள்ள வந்த வண்ணம் உள்ளனர். இதில், பழ.நெடுமாறன், மதிமுக பொதுச்செயலர் வைகோ, இயக்குனர் சீமான், இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
மலேசியாவிலிருந்து வந்திருக்கும் பேராளர் குழுவில், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன், பேராக் சட்டமன்ற உறுப்பினர் சிவநேசன், நெகிரி குணா, ஹிண்ட்ராஃப் தலைவர்கள் வி.கணபதி ராவ், கே.வசந்தக்குமார், பினாங்கு மாநில பிரமுகர் டத்தே அருணாசலம், ஐபிஎப் மதியழகன், ஜெயபாலன், கவுன்சிலர் இராமச்சந்திரன், வழக்கறிஞர் மங்களேஸ்வரி, சத்தீஸ் முனியாண்டி மேலும் பலர் கலந்துக்கொள்கின்றனர்.
பட விளக்கம் :
மாநாட்டு சம்பந்தமாக பிடிக்கப்பட்ட படங்கள்