Friday, February 5, 2010

கோயம்பூத்துரிலிருந்து நமது நிருபர் த.மேத்தியுஸ்.

கோயம்பூத்துரிலிருந்து நமது நிருபர் த.மேத்தியுஸ்.

பிப்ரவரி 6 2010

தமிழகம் கோவையில் இன்று தொடங்கும், உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துக்கொள்ள, மலேசியாவிலிருந்து பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி தலைமையில் 30 பேர் பேராளர் குழுவினர் இங்கு வந்து சேர்ந்தனர். நேற்று நண்பகல், கோயம்பூத்தூர் விமான நிலையம் வந்தடைந்த பேராசிரியர் அவர்தம் குழுவினரையும், ஏற்பாட்டுக்குழு தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் ஆதரவாளர்கள், மலேசியப் பேராளர்களுக்கு வீர வரவேற்பு வழங்கினர்.

மாநாட்டின் முதல்நாளான இன்று (6-2-2010) பேராசிரியர் இராமசாமி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து பேருரை ஆற்றுவார். உலக முழுவதிலும் இருந்து இம்மாநாட்டில் கலந்துக்கொள்ள வந்த வண்ணம் உள்ளனர். இதில், பழ.நெடுமாறன், மதிமுக பொதுச்செயலர் வைகோ, இயக்குனர் சீமான், இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

மலேசியாவிலிருந்து வந்திருக்கும் பேராளர் குழுவில், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன், பேராக் சட்டமன்ற உறுப்பினர் சிவநேசன், நெகிரி குணா, ஹிண்ட்ராஃப் தலைவர்கள் வி.கணபதி ராவ், கே.வசந்தக்குமார், பினாங்கு மாநில பிரமுகர் டத்தே அருணாசலம், ஐபிஎப் மதியழகன், ஜெயபாலன், கவுன்சிலர் இராமச்சந்திரன், வழக்கறிஞர் மங்களேஸ்வரி, சத்தீஸ் முனியாண்டி மேலும் பலர் கலந்துக்கொள்கின்றனர்.

பட விளக்கம் :

மாநாட்டு சம்பந்தமாக பிடிக்கப்பட்ட படங்கள்

No comments:

Post a Comment