Tuesday, March 30, 2010

அரசியல் என்பது மாபெரும் புத்தகம், அதில் நான் எப்பொழுதும் பாடம் கற்கும் மாணவன்தான், வேண்டுமென்றால் தினகரனுக்கு அதை கற்றுக் கொடுக்கவும் நான் தயார்

அரசியல் என்பது மாபெரும் புத்தகம், அதில் நான் எப்பொழுதும் பாடம் கற்கும் மாணவன்தான், வேண்டுமென்றால் தினகரனுக்கு அதை கற்றுக் கொடுக்கவும் நான் தயார். மாபெரும் அரசியல் மேதை தினகரனுக்கு சத்தீஸ் முனியாண்டி பதில்.
நேற்றைய தமிழ் நாளிதழ் (மலேசிய நண்பன் 29.03.2010) ஒன்றில், அரசியல் அரிச்சுவடி தெரியாத சத்தீஸ் முனியாண்டி என்ற தலைப்பில், அறிக்கை விடுத்திருக்கிறார் பினாங்கு மாநில மாநில மஇகா இளைஞ்சர் பகுதி தலைவர் தினகரன். பினாங்கு மாநில மஇகா தலைவரான டத்தோ பி.கே. சுப்பையாவிற்கு கூஜா துக்கி, பினாங்கு மாநில மஇகா இளஞ்ர் பிரிவு தலைவர் அறிக்கை விடுத்திருப்பதில், எந்தவொரு ஆச்சரியமும் இல்லை. இருப்பினும், கூஜா துக்கும் தனது வேலையை எந்தவொரு பிழையுமின்றி செய்ய வேண்டும் என்பது தினகரனுக்கு தெரியாமல் போனதுதான் ஆச்சரியம். எனக்கு அரசியல் அரிச்சுவடி தெரியாது என்று கூறியிருக்கும், தினகரன்தான் மாபெரும் அரசியல் மேதையாயிற்றே, அவர் எப்படி தனது அறிக்கைகளில் தவறு செய்யலாம் ?
ஜனநாயக செயல் கட்சியை நேற்று பெய்த மலையில் இன்று பூத்த காளான் என்று கூறியிருப்பதில் தினகரனின் தலைக்கனம் தெரிகின்றது. ஐயா, அரசியல் மேதை தினகரனே, ஊம்முடைய வயதை விட ஜசெகவின் வயது அதிகம். 44 வருட போராட்ட வரலாற்றைக் கொண்டது ஜசெக. ஜனநாயக செயல் கட்சியின் மக்கள் போராட்டத்தில் சிறை சென்ற தலைவர்கள் எத்தனை பேர் என்று அரசியல் மேதை தினகரனுக்கு தெரியுமா? மலேசிய தமிழர்கள் மட்டுமின்றி, உலகத் தமிழர்கள் பலரிடமும் புகழ் பெற்ற தொழிற்சங்க போராட்டவாதி டாக்டர் வி.டேவிட், சிம்மக்குரலோன் பி.பட்டு, கொண்டிருந்த கட்சி ஜசெகதான். ஜெலுத்தோங் சிங்கம் கர்ப்பால் சிங், லிம் கிட சியாங் போன்ற உன்னதமான போராட்டவாதிகளை தன்னகத்தே கொண்டு இன்றும் மக்களுக்கு போராடும் கட்சிதான் ஜசெக. ஜசெகாவின் போராட்ட வரலலற்றில் உரிமைகளை கேட்டதற்காக சிறை சென்றவர்களில், இன்றைய பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கும் ஒருவர். இந்த வரலாற்று சம்பவங்கள் நடந்த பொழுதெல்லாம் தினகரன் கைசுப்பும் குழந்தையாக இருந்திருப்பார். அவ்வாறு இருந்தது தவறில்லை, வரலாற்றைத் தெரிந்துக் கொண்டு எதுவும் பேச வேண்டும். எதோ பேச வேண்டும், அறிக்கை விட வேண்டும் என்று பேசி, தான் ஒரு குறைகுடம் என்பதை தினகரன் நிருபித்துள்ளார்.
முடிந்து போன பிரச்சனையான கம்போங் புவா பாலா பிரச்சனையைப் பற்றி இன்னும் எத்தனை காலம்தான் இந்த மஇகா மேதைகள் பேசிக் கொண்டிருக்கப் போகிறார்கள்? கம்போங் புவா பாலா பிரச்சனையில், தேவையில்லாமல் மூக்கை நுழைத்து பிரச்சனைகள் புரிந்தது இந்த மஇகா கூட்டம்தான். கம்போங் பூவா பாலா மக்களுக்கு, அந்த கம்போங் புவா பாலா நிலத்திலேயே, சுமார் 6 இலட்சம் வெள்ளி பெறுமானமுள்ள இரட்டை மாடி வீடுகளை பெற்றுத் தந்து சாதனை புரிந்தது பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசு. அவ்வாறு கட்டப்படப் போகும் புதிய வீட்டமைப்பு பகுதி, புதிய புவா பாலா கிராமாம் என்றும் அழைக்கப்படும். இது மக்கள் கூட்டணி அரசின் சாதனை. அவ்வாறு இழப்பீட்டை பெற்றுக் கொடுக்க பேச்சுவார்த்தை நடந்துக் கொண்டிருந்த பொழுதே, கோலாலும்புரிலிருந்து வண்டி பிடித்து வந்து இங்கு தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தியது மஇகாவினர்தான். அதற்கான அனைத்து வேலைகளையும் இங்கிருந்து கனக்கச்சிதமாக செய்து முடித்தவர்தான் இந்த அரசியல் மேதை தினகரன். இவர்களின் சாதனை தலைவர், ஒரு படி மேலே போய், கம்போங் புவா பாலா மக்களுக்கு 3.2 மில்லியன் ரிங்கிட்டை தர மஇகா தயார் என்று பெரிதாக அறிக்கை எல்லாம் விடுத்தார். அந்த வாக்குறுதி என்னவாயிற்று, அந்த வாக்குறுதியை நம்பித்தான், கம்போங் புவா பாலாவின் 9 குடும்பங்கள் பினாங்கு மாநில அரசு பெற்றுக் கொடுத்த 6 இலட்சம் வெள்ளி பெறுமானமுள்ள இழப்பீட்டை வேண்டாம் என்றனர். அதற்கு முதலில் பதில் கூறுங்கள் அரசியல் மேதையே.
பிறகு, டத்தோ சுப்பையாவின் பெயரை எதோ நான் வேண்டுமென்று டத்தோ கருப்பையா என்று எழுதி விட்டதை போல அறிக்கை விடுத்துள்ளார் அரசியல் மேதை தினகரன். அது நாளிதழ் அச்சில் ஏற்பட்ட பிழையாகத்தான் இருக்கும், என்பது எந்தவொரு அடிப்படை அரசியல் தெரிந்த மனிதனுக்கும் தெரியும், ஆனால் மாபெரும் அரசியல் மேதை தினகரனுக்கு தெரியாமல் போனது ஆச்சரியம்தான். பினாங்கு மாநிலத்தின் maஇகா தலைவர் டத்தோ சுப்பையாதான் என்பதும் எனக்கு தெரியும், அவர் கவுன்சிலராக, சட்டமன்ற உறுப்பினராக, ஆட்சிக்குழு உறுப்பினராக செய்த சாதனைகளும் எனக்கு தெரியும். செபராங் பிறை நகராண்மைக்கழக உறுப்பினராக இருந்த காலத்தில் இந்தியர்களுக்கு என்று எதுவுமே பேசாமல், பகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பொழுது தனது சொந்த தொகுதியில், சொந்த நிலத்திலிருந்த சிவன் கோவில் விரட்டியடிக்கப்பட்ட பொழுது வேடிக்கைப்பார்த்த, பினாங்கு மாநில முன்னாள் அரசாங்கம் கம்போங் புவா பாலா நிலத்தை கூட்டுறவு கழகத்திடம் தாரைவார்த்துக் கொடுத்த பொழுது, ஆட்சிக்குழு கூட்டத்தில் குறட்டை விட்டுக் கொண்டிருந்த டத்தோ சுப்பையாதானே? எனக்கு அவரையும் தெரியும் அவரை சுற்றி கூஜாத் துக்கி கொண்டிருந்தவர்களையும் தெரியும்.
பினாங்கு மாநில மூத்தக் குடிமக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நூறு ரிங்கிட் கொடுப்பதை, மிட்டாய் சாப்பிடவா என்று கேலி பேசியிருக்கிறார் தினகரன். மக்களோடு மாநிலத்தின் வளத்தை பங்கீட்டுக் கொள்ளும் மனம் கொண்டது பினாங்கு மக்கள் கூட்டணி அரசு, மாநில நிதி வளங்களை தங்களுக்கு தாங்களே பங்கீட்டுக் கொள்ளும் ஊழல் அரசாங்கம் யார் என்பது பினாங்கு மக்களுக்கு தெரியும். ஆகவே, உங்களின் கேலிப்பேச்சுகள் அனைத்தையும் நாங்களும் சரி, மக்களும் சரி, பெரிதாக எடுத்துக் கொள்ளப்போவதில்லை. குறைக்குடம்தான் தழும்பும் என்பதற்கு தினகரனும் அவரது அறிக்கையுமே மிகப்பெரிய உதாரணம். இருந்த பொழுதிலும், தினகரன் கூறியிருக்கும் ஒரு கூற்றில் உண்மை உள்ளது, சுனாமி என்பது அடிக்கடி ஏற்படாது. கடந்த முறை ஏற்பட்டது ஒரு சிறிய சுனாமிதான், அடுத்தப் பொதுத்தேர்தலில் ஏற்படப்போகும் அரசியல் பூகம்பத்தில் மக்கிப்போன ஆலமாரமான மஇகா வேரோடு சாயப்போகின்றது. குத்தகைகளுக்காக அரசியல் கட்சியில் சேர்ந்து வேற்று அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கும் சிலரின் ஆட்டத்தை அப்பொழுது நாங்களும் கண்கூட பார்க்கத்தான் போகின்றோம்.

No comments:

Post a Comment